10 மாத குழந்தைக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சை இன்றி சிறுநீரக கற்களை அகற்றி மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாதனை

மதுரை
29-11-25

 

10 மாத குழந்தைக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சை இன்றி சிறுநீரக கற்களை அகற்றி மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாதனை

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் 10 மாதமே ஆன ஒரு பச்சிளம் குழந்தைக்கு வயிற்றில் கீறலிட்டு செய்யும் பெரிய அறிவை சிகிச்சை இல்லாமலேயே வெற்றிகரமாக இரண்டு சிறுநீரகங்களிலும் இருந்த கற்களை அகற்றி உள்ளது.இந்த சிகிச்சைக்குப் பிறகு குழந்தைக்கு சிறுநீர் சீராக வெளியேறியது.இதுகுறித்து சிறுநீரகவியல் மற்றும் ஆண் இனப்பெருக்கவியல் முதுநிலை நிபுணர் பால் வின்சென்ட் கூறுகையில் ஒரு வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு கூட சிறுநீரக கற்களை அகற்ற பெரிய அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவதில்லை.லேசர் மற்றும் நவீன கருவிகள் மூலம் பெரியவர்களைப் போலவே குழந்தைகளுக்கும் திறம்பட சிகிச்சை அளிக்கலாம் குறைவான இரத்தப்போக்கு மருத்துவமனையில் குறுகிய காலம் தங்குவது வேகமாக குணமடைவது தழும்புகள் இல்லாமல் இருப்பது போன்ற பல முக்கிய ஆதாயங்களை இந்த நவீன சிகிச்சை முறைகள் வழங்குகின்றன திறந்த நிலை அறுவை சிகிச்சை காயத்தோடு தொடர்புடைய சிக்கல்கள் வராமல் தடுக்க உதவும் இந்த முறை அதிக வெற்றி விகிதத்தை உறுதி செய்கிறது எதிர்காலத்தில் சிறுநீரக கற்கள் மீண்டும் உருவானாலும் அதை அகற்றுவதற்கான செயல்முறைகள் எளிதாக இருக்கும் என்றார்.மேலும் சிறுநீரகவியல் துறை தலைவர் முதல் நிலை நிபுணர் ரவிச்சந்திரன் கூறுகையில் கல் உருவான தற்கான மூலகாரணத்தை கண்டறிவது அவசியம் கற்களை முழுமையாக அகற்றுவதன் வளர்சிதை மாற்ற பரிசோதனைகளை மேற்கொண்டு அதற்கேற்ற சிகிச்சை மீண்டும் கற்களை உருவாவதை தடுக்க முடியும் என்றார்.இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மருத்துவ நிர்வாகி கண்ணன் சிறுநீரகவியல் நிபுணர் வேணுகோபால் கோணங்கி உடன் இருந்தனர்

*பாலகிருஷ்ணன்
மதுரை மாவட்ட செய்தியாளர்*