மூன்று சிறுமிகளை அடுத்தடுத்து தெரு நாய் கடித்ததால் பொதுமக்கள், முதியோர்கள், குழந்தைகள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் நேற்று முன் தினம் குமார கோவில் நடுத்தெரு அருகே மாலையில் மூன்று சிறுமிகளை அடுத்தடுத்து தெரு நாய் கடித்துள்ளது.

இதனால் பொதுமக்கள், முதியோர்கள், குழந்தைகள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர்.

ஆகையால் இப்பகுதியில் உள்ள தெருநாய்களை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டி கல்லிடைக்குறிச்சி நகர இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன்,பாஜக வடக்கு மாவட்ட துணைத் தலைவர் மாரியப்பன் (தொழில்துறை வல்லுநர் பிரிவு), இந்து முன்னணி சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் ராம்குமார், மற்றும் செங்கொடி,ஆதி,இசக்கிராஜ், பாலாஜி, சமூக ஆர்வலர்கள் ராமகிருஷ்ணன், ஸ்டுடியோ மாரியப்பன்,சுரேஷ் ஆகியோர் மற்றும் இந்து முன்னணி, பாஜக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு புகார் மனு கொடுக்கப்பட்டது.