மக்காச் சோளப்பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்.
பன்றிகளை பிடிக்கவும் இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை.
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் விளம்பாவூர் கிராமத்தில் விவசாயிகள் சுமார் 600 ஏக்கர்க்கும் மேல் தங்கள் விவசாய நிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டு வருகிறார்கள்.
ஆண்டுதோறும் பயிற்செய்யும்போது படைப்புழு தாக்குதல்,மழை பொழிவு தாக்குதல் போன்ற இயற்கை பேரிடரால் பயிர்கள் சேதமடைந்து அழிந்து வருகிறது இதனால் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துவருவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில் இந்தாண்டு விவசாயிகள் விதைத்துள்ள மக்காச்சோளப் பயிர்களை காட்டு பண்றிகள் சேதப்படுத்தி வருகிறது.
இதனை விவசாயிகள் துரத்த சென்றால் கடிக்க முயல்கிறது மேலும் விவசாயிகளை துறத்தி அடிக்கின்றது விவசாய நிலங்களில் உள்ள மக்காச்சோளப்பயிர்களை உடைத்து மண்களை பறித்து பயிர்களை தோன்றி போட்டுவிடுகிறது.
இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர் மேலும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து வருகிறார்கள்.
மேலும் பண்றிகளை பிடிக்கவும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியர்,வட்டாட்சியர்,மற்றும் அரசுக்கு விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழன் உதயம் செய்திகளுக்காக செய்தியாளர்
பாசார் செல்வேந்திரன்






