பத்து ஆம் வகுப்பு படித்தவர் பல கோடிக்கு அதிபதி ; போலி மருந்து கதையில் விறுவிறு காட்சிகள் புதுச்சேரி : வேலை தேடி புதுச்சேரிக்கு வந்த ராஜா ( எ ) வள்ளியப்பன் போலி மருந்து தயாரித்து பல கோடிக்கு அதிபதியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடுத்தடுத்து அம்பலமாகி உள்ளது புதுச்சேரியில் பெரும் புயலை கிளப்பியுள்ள போலி மருந்து விவகாரத்தில் முன்ஜாமின் பெற்று தலைமறைவாக இருந்த ராஜா ( எ ) வள்ளியப்பன் , நாற்பத்து இரண்டு ; விவேக் ஆகியோர் கடந்த பத்து ஆம் தேதி புதுச்சேரி கோர்ட்டில் சரணடைந்தனர் . அவர்களை எஸ் . பி . , நல்லாம்பாபு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர் சிவகங்கை மாவட்டம் , திருப்பத்துார் அடுத்த கருங்குழி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் வள்ளியப்பன் . பத்து ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த இவர் , வேலை தேடி கடந்த இரண்டாயிரம் ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்தவர் , மருந்து கடையில் வேலை செய்தார் . பின் , கடலுாரில் ஏஜென்சி எடுத்து , மருந்து மொத்த …