தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கல்லிடைகுறிச்சி கோட்டத்தில் திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் மற்றும் திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அவர்கள் உத்திரவின் படியும் , செயற்பொறியாளர் கல்லிடைக்குறிச்சி அவர்களின் வழிகாட்டுதல்

படியும் . பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் சேரன்மகாதேவி பேருந்து நிலையப் பகுதியில் வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு உ.செ.பொ / விநி/ சேரை மற்றும் உ.பொ / விநி/ சேரை மற்றும் பிரிவு பணியாளர்கள் சார்பாக மின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திரு கிருஷ்ணன்- வியாபார சங்கத் தலைவர், திரு இசக்கி – விக்னேஷ் ஜெராக்ஸ், திரு ஜெயராஜ் – விவசாய சங்க தலைவர் திரு நைனா முகமது- சமூக ஆர்வலர் மற்றும் சுல்தான் பீர் காதர் – சமூக ஆர்வலர் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தந்தனர்.






