புது டெல்லி , ஆக. 20-: முஸ்லிம் சமுதாயத்தில், மூன்று முறை’தலாக்’ என்று கூறி ஆண்கள் தங்கள் மனைவியை விவகாரத்து செய்யும் வழக்கம் நடை முறையில் உள்ளது. இந்த முத்தலாக் நடை முறை அரசியல் சட்டத்திற்கு விரோதமனது என்று 2017 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இதையடுத்து 2019ஆம் ஆண்டு முத்தலாக்குக்குதடை விதிக்கும் முஸ்லிம்பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவே றறப்படடது .இந்த சட்டத்தின் மூலம் முத்தலாக் வ ாயிலக விவாகரத்து செய்வோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் முத்தலாக்குக்கு தடைவிதிக்கும் சட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில், மத்திய அரசு கொண்டு வந்த முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள்பாதுகாப்பு)சட்டம், 2019 அரசியலமைப்பிற்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனுவிற்கு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் விரிவான பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளது.அதில், திருமணமான முஸ்லீம்பெண்க ளின் அடிப்படை உரிமை மற்றும் பாலின சமத்துவத்திற்கு முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புசட்டம் உதவுகிறது.முத்தலாக் நடைமுறை அரசியலமைப்பின் கீழ் பெண்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுகிறது.முத்தலாக் நடைமுறையானது திருமணம் எனும் சமூக அமப்பிற்கு ஆபத்தானது .அந்த நடை முறை முஸ்லீம் பெண்களின் நிலைமயைமிகவும் பரிதாபகரமானதாக ஆக்குகிறது. முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையை அணுகுவதைத் தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை.அதே சமயம் இந்தசட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனைகள் இல்லாததால் கணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலைக ாவல் துறையினருக்கு ஏற்படுகிறது.இதைத்தடுக்கும் வகையில் கடுமையான சட்ட விதிகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது”என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முத்தலாக் தடை சட்டம்- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!






