பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி தப்ப முயன்ற போது சுட்டுப்பிடித்த ஆய்வாளர்!

நாகர்­கோ­வில் ஆக 20 குமரி மாவட்­டம் அஞ்­சு­கி­ரா­மம் காவல் நிலைய எல்­லைக்­குட்­பட்ட புன்னார்­கு­ளம் ஆல்­டிக்சோப்புகம்­பெனிஅரு­கில் வைத்து 18ம்தேதி இரவு கரும்­பாட்­டூர் ஊரை சார்ந்த ராம­கி­ருஷ்­ணன் என்­பவ­ரின் மகன் செல்­வம் (எ) செல்­வ­மு­ரு­கன்38 என்­பவர் தன்னை கத்­தி­யால் தாக்கி மிரட்டி பணம் பறித்­த­தாக பாதிக்­கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்­படை­யில் அஞ்­சு­ கி­ரா­மம் காவல் நிலை­யத்­தில் வழக்குபதிவு செய்­யப்­பட்டு குற்­றவா­ளியை தேடி வந்­தனர்.இந்­நி­லை­யில் அவர் தேரூர் அரு­கில் பதுங்கி இருப்­ப­தாக போலீ­சாருக்கு கிடைத்த ரக­சிய தக­வ­லின் அடிப்­படை­யில்சுசீந்­தி­ரம் வட்ட காவல்ஆய்­வா­ளர் ஆதம் அலி,அஞ்­சு­கி­ரா­மம் காவல் உதவி ஆய்­வா­ளர் லிபிபால்­ராஜ் தலைமை­யில் போலீ­சார் குற்­றவாளி தலை­ம­றை­வாக இருந்த இடத்­திற்கு வந்­தனர்.போலீ­சார் தன்னை சுற்றி வளைத்­தி­ருப­பதை அறிந்த குற்­றவாளி தப்­பிச் செல்ல முயற்­சித்­துள்­ளார்.உடனே உதவி ஆய்­வா­ளர் லிபி பால்­ராஜ் அவரை பிடிக்க முயன்ற போதுதான் மறைத்து வைத்­தி­ருந்த அரி­வா­ளால் வெட்­டிய­தில் உதவி ஆய்­வா­ள­ருக்கு பலத்த காயம் ஏற்­பட்­டது.எனவே ஆய்­வா­ளர் ஆதம் அலி தான் வைத்­தி­ருந்த கைத்­துப்­பாக்­கி­யால் வானத்தை நோக்கி சுட்டுசர­ணடை­யும் ­படி எச்­ச­ரித்­தும் கேட்­கா­மல் மீண்­டும் சார்பு ஆய்­வா­ளர் லிபிபால்­ராஜை வெட்டிவிட்டு தப்ப முற்­பட்ட போது காவல் ஆய்­வா­ளர் வலது காலில் சுட்­ட­தில் காயம் ஏற்­பட்டு குற்­றவாளி கீழே விழுந்­துள்­ளார். உட­னடி­ய­க­கா­யம்­ பட்ட குற்­றவாளி மற்­றும் உதவி ஆய்­வா­ளர் ஆகி­யோரை காவல் ஆய்­வா­ளர் மீட்டு ஆசாரிப்­பள்­ளம் அரசு மருத்துவக்­கல்­லூரிமருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­தித்­தார். இரு­வ­ருக்கும் தற்­போது சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கி­றது.போலீ­ஸா­ரால் சுட்­டுப்பிடிக்­கப்­பட்ட பிர­பல ரவுடி செல்­வம் தென்­தா­ம­ரைக்­கு­ளம் காவல் நிலையத்­தில் A+ வகை சரித்­திரபதி­வேடு குற்­றவா­ளி­ யாவார். மேலும் இவர்­ மீது பல்­வேறு மாவட்­டங்­களில் 28 குற்­ற வ­ழக்­கு­கள் உள்­ளன.அதில் 06 கொலை வழக்கு­க­ளும் 07 கொலை முயற்சி வழக்­கு­க­ளும் அடங்­கும். மேலும் இவர் மீது பல்­வேறு மாவ ட்­டங்க­ளில் 05 நீதி­மன்ற பிடி­யாணை­கள் நிலு­வை­யில் உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.