கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அய்யூர் சாலை மற்றும் அடைக்கலாபுரம் ஆகிய பகுதிகளில் கிராமமக்களின் பயன்பாட்டுக்காக தேன்கனிக்கோட்டை மின்வாரிய துறை மூலம் அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மர்களை கடந்த மாதம் 14ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் உடைத்த மர்ம நபர்கள் அதில் இருந்த காப்பர் கம்பிகள் மற்றும் ஆயில்களை திருடி சென்றனர். இந்த திருட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகள் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில்
தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் கணேஷ் குமார் ஆலோசனைப்படி துணை ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் குழு அமைத்து
ரஞ்சித் குமார்
கண்ணன் தேன்கனிக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி நள்ளிரவு நேரத்தில் டிரான்ஸ்பார்மர்களை உடைத்து காப்பர் கம்பிகளை திருடி வந்த தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா சம்மனள்ளி கிராமத்தை சேர்ந்த பழனி (28) மற்றும் அவரது சகோதரர் சேகர் (26) தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியை சேர்ந்த விஜி (20) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பேளாளம் கிராமத்தை சேர்ந்த கிரீஸ் (26) ஆகிய நான்கு பேரையும், இவர்களிடமிருந்து காப்பர் கம்பிகளை விலைக்கு வாங்கிய தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே உள்ள அஞ்சான் மயில் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி (42) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 100 கிலோ காப்பர் கம்பிகள் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி, உத்தனப்பள்ளி, ஓசூர், கெலமங்கலம்.பேரிகை, வேப்பனஹள்ளி, குருபரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக இவர்கள் தங்களது கைவரிசைகளை காட்டி வந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் சுமார் 72க்கும் மேற்பட்ட ட்ரான்ஸ்பார்மர்கள் உடைக்கப்பட்டு காப்பர் கம்பிகள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேறு எந்த பகுதிகளில் இவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்தும் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தக் குழுவில் ரஞ்சித் குமார் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தார்






